நடிகர் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் இன்று உலகம் முழுவதும்  வெளியாகவுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் நேற்றைய இரவு முதலே,  பால் அபிஷேகம், குத்தாட்டம், பட்டாசு,  என திருவிழாவை போல் இப்படத்தை வரவேற்றுள்ளனர்.

முதல் நாள் முதல் காட்சியை பார்க்க உலகம் முழுக்க உள்ள அஜித் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு திரண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இப்படம் 'பிங்க்' படத்தின் ரீமேக்காக இருந்தாலும் கூட, சில கூடுதல் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இது எந்த விதத்திலும் இப்படத்தின் ஸ்வாரஸ்யத்தையும், கதைக்களத்தையும் பாதிக்காதவாறு திறமையுடன் கையாண்டுள்ளார் இயக்குனர் எச்.வினோத் என்றால் அது மிகையாகாது.

அதே போல் அஜித்தின் கேரியரில், சூப்பர் ஹிட்டாக அமைத்த பில்லா, மங்காத்தா போன்ற படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா நேர்கொண்ட பார்வை படத்திற்கும் இசையமைத்துள்ளதாலும், ஏற்கனவே வெளியான 'அகலாதே' பாடல் ரசிகர்கள் மனதில், மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், இசையில் செம்ம ஸ்கோர் செய்துள்ளார்.

மேலும் இப்படத்தை பார்த்த, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், வெகுவாக இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களையும், இப்படத்தை தேர்வு செய்து நடித்தற்காக அஜித்தையும் பாராட்டி வருகிறார்கள். 

இது ஒரு புறம் இருக்க, பிரபல நடிகர் சாந்தனு அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தின் டிக்கெட் பிரச்சனைக்காக ரசிகர் ஒருவர், பிரபல திரையரங்கில் தன் மேல் 'பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க தீப்பெட்டி தேடிக்கொண்டிருந்ததாகவும், அவரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் பகீர் பதிவை பதிவிட்டுள்ளார்.