பிரபலங்கள் சில நேரங்களில் உருக்கமாக, வேதனையோடு... தங்களுடைய நிலையை ரசிகர்களுக்கு தெரியுமாறு எடுத்துக் கூறினாலும், அதனை சிலர் துச்சமாக நினைத்து அவர்களையே, மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்து வருபவர் பிரபல பாடகி சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது  #METOO மூலம், பாலியல் குற்றம் கூறியதில் இருந்து, ஒரு சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும் சிலர் இவருக்கு எதிராகவும், விமர்சனங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது சின்மயி, மிகவும் உருக்கமாக ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  அதில் நான் ஒரு பாடகி மட்டும்தான் எனக்கு அதிகப்படியான மோசமான விமர்சனங்கள்,  நேரடியாகவும் இணையதளம் மூலமாகவும்,  பலர் அனுப்பி வருகின்றனர்.  என ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.

மேலும், அஜித் ரசிகர் ஒருவர்... சின்மயிக்கு சொல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமான, வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். தற்போது இந்த கமெண்டை வெளியிட்டு, ஒவ்வொரு நாளும் இதுபோன்ற விமர்சனங்களை தான் சந்தித்து வருவதாகவும் இவர் ஒரு பிரபல நடிகரின் வெறியன், ரசிகன், ரத்தம், குடும்பம், என சொல்லிக்கொண்டு சமூக வலைத்தளத்தில் வளம் வருகிறார். இதன் மூலம் எனக்கும், என் கணவரும் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவோம் என யோசிக்க வில்லை என கோபத்தில் கொந்தளித்துள்ளார்.