ரஜினியுடன் 'பேட்ட' படத்துடன்  அஜித் நடித்த 'விஸ்வாசம்' தல ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஃபேமிலி ஆடியன்ஸை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வரவழைத்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் பி மற்றும் சி சென்டர்கள் கிராமப்புற பகுதிகள் எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. 

அதுமட்டுமல்ல, சூப்பர் ஸ்டார் படத்தோடு வெளியாகி, அந்த படத்தையும் ஓரங்கட்டி, அடுத்ததாக வெளியான நான்கு படங்களைக் காட்டிலும் 'விஸ்வாசம்' வசூலே அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கே ஹேப்பியான ஒரு தகவல் கிடைத்துள்ளது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ்மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம், நல்ல வரவேற்பை பெற்றதால்,  கர்நாடகா விநியோகஸ்த உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து "ஜகா மல்லா" என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

கன்னட மக்களையும் இப்படம் கவரும் என்பதால் படத்தை டப் செய்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் கன்னடத்தில் வெளிவரும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

என்னதான் பிக் பட்ஜெட் படங்களாக இருந்தாலும் கர்நாடகாவில் பல மொழிப்படங்கள் வெளிவந்தாலும், அவை கன்னடத்தில் டப் செய்து வெளியிடுவதில்லை, இந்நிலையில் கடந்த 50 ஆண்டில் வேறு எந்த ஒரு தமிழ் நடிகரும் செய்யாத வரலாறு படைத்தார் தல அஜித்.