அக்கா அனுஷ்காவுடன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைக்கண்ட அஜித் ரசிகர்கள் குட்டி தல.. குட்டி ஷாலினி என அவர்களை கொஞ்சி வருகின்றனர். 

அஜித்தின் மகன் ஆத்வில், மகள் அனோஷ்காவின் புதிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திரையுலகின் நட்சத்திர தம்பதியான அஜித்-ஷாலினி ஜோடி 2000 ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர். 2008ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர். பின், கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி அஜித்-ஷாலினி தம்பதிக்குப் பிறந்த ஆண் குழந்தை தான் ஆத்விக்.

நடிகர் அஜித் அமர்களம் படத்தில் நடித்த போது தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அனுஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இவர்களின் புகைப்படம் அரிதாகத்தான் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், அக்கா அனுஷ்காவுடன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைக்கண்ட அஜித் ரசிகர்கள் குட்டி தல.. குட்டி ஷாலினி என அவர்களை கொஞ்சி வருகின்றனர். ட்டிட்டர் பக்கத்தில் #AadvikAjith #AnoushkaAjith என்கிற இரு ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளன. இரு வைரங்கள் என கொண்டாடி வருகின்றனர்.