ajith birthday relese amarkalam movie

தல அஜித் பிறந்த நாள் வரும் மே 1ஆம் தேதி வரவுள்ள நிலையில் இந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். 

ஒவ்வொரு தல பிறந்த நாளின் போதும், பல்வேறு சமூக சேவைகள் செய்தும் தங்களுடைய பாசத்தை நல்லவிதத்தில் வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் பிறந்த நாள் அன்று ரசிகர்களை மேலும் உற்சாக படுத்த அவர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று தமிழகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்திகள் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் மே 1ஆம் தேதி அஜித், ஷாலினி நடித்த 'அமர்க்களம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜித், ஷாலினி வாழ்க்கையில் இணைய காரணமான இந்த படத்தை சரண் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் ரகுவரன், ராதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையில் உருவாகியிருந்த இந்த படம் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.