கோலிவுட் திரையுலகில் அஜித்துக்கு உள்ள ரசிகர்களின் பலம் அனைவருக்கும் தெரியும், இதன் காரணமாக அஜித் நடிக்கும் ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும் என நினைக்கும் இயக்குனர்கள் பலர் உள்ளனர்.

திறமையுள்ள அனைத்து இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் அஜித் இயக்குனர் பாலாவிற்கு அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.

கடந்த 2009 ஆண்டு ஆர்யா மற்றும் நடிகை பூஜா நடித்து வெளியான 'நான் கடவுள்' படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் அஜித் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் திடீர் என இந்த படத்தில் இருந்து அஜித் விலகினார் என்கிற தகவல் மட்டுமே வெளியானதே, தவிர இது குறித்து எந்த காரணங்களும் இயக்குனர் பாலாவிடம் இருந்தும் அஜித்திடம் இருந்தும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இதுக்குறித்து பிரபல ஊடகத்தில், பத்திரிகையாளர் ஒருவர் இதை பற்றி முழு விவரத்தையும் கூறியுள்ளார்.

அதில்,  அஜித் 'நான் கடவுள்' படத்திற்காக பாலா கூறியது போலவே... முடி வளர்ந்து உடல் எடையை குறைத்தார். மேலும் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே அஜித்திற்கு சம்பளமாக ரூ 1 கோடியை பாலா கொடுத்தார்.

ஆனால், கடைசி வரை படப்பிடிப்பு என்பதை பாலா தொடங்கவே இல்லை, அஜித்தும் அந்த கேப்பில் இரண்டு படங்கள் நடித்து முடித்து விட்டார். இருப்பினும் பாலா இந்த படம் குறித்து அஜித்திடம் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.

சில மாதங்கள் கழித்து 'நான் கடவுள்' படத்திலிருந்து அஜித் நீக்கப்பட்டதாக தகவல் மட்டுமே வெளியே வர, அஜித் பாலாவிடம் இதுக்குறித்து பேசியபோது. சரியான பதில் தெரிவிக்கப்படவில்லை. மேலும் தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்ற தொகையை திருப்பி கொடுக்குமாறு கூறியுள்ளார் பாலா. எனவே அஜித்தும் தான் சம்பளமாக பெற்ற ரூ.1  கோடியை கொடுத்ததும்... ஒரு கோடி ரூபாய்க்கான வட்டி தொகையும் வேண்டும் என கெடுபிடி கொடுத்துள்ளனர்.

முதலில் அஜித் தரப்பினர் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். பின்   பணம் தானே வேண்டும் என்று வட்டியையும் கொடுத்துள்ளார் அஜித். மனிதர்களை பார்க்காமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பாலா உற்பட சிலர் பேசியதும், காரணம் கூறாமலே இந்த படத்தில் இது அவரை வெளியேற்றியது தான் உண்மை என்பதை போட்டுடைத்துள்ளார் பிரபல பத்திரிக்கையாளர். இதன் மூலம் பல ஆண்டுகளாக வெளிவராத பஞ்சாயத்து இப்போது வெளியாகியுள்ளது.