Asianet News TamilAsianet News Tamil

எம்.ஐ.டி மாணவர்களுக்கு பாடம் எடுக்க வெளிநாடு சென்று "Aero Modeling " பயிற்சி பெரும் அஜித்! வெளியானது புகைப்படம்!

எம்.ஐ.டி.மாணவர்களுக்காக சொந்த செலவில் வெளிநாடுகளுக்கு சென்று Aero Modelling  கற்றுக்கொள்ளும் அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
 

ajith attend the class for aero modeling photos leaked
Author
Chennai, First Published Nov 28, 2018, 11:36 AM IST

எம்.ஐ.டி.மாணவர்களுக்காக சொந்த செலவில் வெளிநாடுகளுக்கு சென்று Aero Modelling  கற்றுக்கொள்ளும் அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக  நியமிக்கப்பட்ட அஜித்குமார் விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார்  அவர் ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதில் வல்லவர்.  இதனால் மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் கலந்து கொள்ளும் குழுவுக்கு உதவி செய்ய அஜித் குமாரை எம்.ஐ.டி. நியமித்துள்ளது. 

ajith attend the class for aero modeling photos leaked

அதன் மூலம் கடந்த மாதம் ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவினார். அஜித்தின் வழிகாட்டுதலில் 'தக்‌ஷா' அணியின் ட்ரோன் (ஆளில்லா விமானம்) நீண்ட நேரம் வெற்றிகரமாகப் பறந்து சாதனை படைத்தது. இதே குழு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியில் நடைபெற்ற 'மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச் - 2018' போட்டியில் கலந்துகொண்டது. மருத்துவ சேவையில் ஆளில்லா விமானங்களின் பணி என்ற கருப்பொருளில் இந்தப் போட்டி நடைபெற்றது.

ajith attend the class for aero modeling photos leaked

இதில் நீண்ட நேரம் பறத்தல், தேவைப்படும்போது உடனடியாகத் தரை இறங்குதல், விமானக் குழுவின் நேர்காணல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் ஆளில்லா விமானத்துக்கும் இந்தியாவின் தக்‌ஷா ஆளில்லா விமானத்துக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதில் நூலிழையில் முதலிடத்தைத் தவறவிட்ட தக்‌ஷா விமானம், சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

ajith attend the class for aero modeling photos leaked

மெடிக்கல் எக்ஸ்பிரஸ்- 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியின் இறுதிச் சுற்று ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லேண்டில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 55 நாடுகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

ajith attend the class for aero modeling photos leaked

 இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில்,  திடீரென்று ஜெர்மனியில் உள்ள ஃபிராங்க்ஃபர்ட் சென்றுள்ளார். ஏனெனில் Aero Modelling சம்பந்தப்பட்ட விஷயத்துக்காக அவர் அங்கே சென்றுள்ளார். தற்போது அங்கு Aero Modelling   குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சினிமாவையும் தாண்டி எம்.ஐ.டி மாணவர்களுக்காக அவர் தனது சொந்த செலவில் வெளிநாடுகளுக்கு சென்று Aero Modelling   கற்றுக்கொள்ளும் அவரின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios