இந்த வருட நியூ இயர் (New Year) தினத்தில், கோலிவுட் திரையுலகில் வசூல் மன்னர்களாக இருக்கும், அஜித் - விஜய் (Ajith and Vijay) ஆகிய இருவரின் படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,  இரு தரப்பு ரசிகர்களையும் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த வருட நியூ இயர் தினத்தில், கோலிவுட் திரையுலகில் வசூல் மன்னர்களாக இருக்கும், அஜித் - விஜய் ஆகிய இருவரின் படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இரு தரப்பு ரசிகர்களையும் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. இன்னும் படம் வெளியாக சில தினங்களே உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதத்தில், அவ்வப்போது படக்குழு லேட்டஸ்ட் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கலுக்கு வெளியாக உள்ள அஜித்தின் படமான 'வலிமை' படத்தின் ட்ரைலர், 2022 நியூ இயர் அன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வந்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தான் முடித்தார். இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோவை வரும் புத்தாண்டு அன்று வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் - அஜித் என இருதரப்பு ரசிகர்களும் செம்ம குஷியாக உள்ளனர். மேலும் இது குறித்த ஹேஷ்டேக்குகளையும், ட்விட்டரில் இப்போதே ரசிகர்களும் வெளியிடத் தொடங்கி விட்டனர். எது எப்படியாகினும் இந்த வருட புத்தாண்டு இரு தரப்பு ரசிகர்களுக்கும் செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.