Asianet News TamilAsianet News Tamil

மோகன் லால் இயக்கத்தில் அஜித்..? வெளியான உண்மை தகவல்!

 நேற்றைய தினம் தல அஜித் அடுத்ததாக பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கி, நடிக்க உள்ள 'பரோஸ்' என்கிற படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவலாக சமூக வலைத்தளத்தில் வெளியானது. 

ajith acting mohan lal direction? truth reveled
Author
Chennai, First Published Mar 31, 2021, 3:23 PM IST

தல அஜித் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள 'வலிமை' படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஒரு சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளதாக போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ajith acting mohan lal direction? truth reveled

'வலிமை' படம் துவங்கியதில் இருந்து, படம் குறித்து தினமும் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, படக்குழுவினர் படம் குறித்த தகவலை தற்போது தான் மெல்ல மெல்ல வெளியிட துவங்கியுள்ளனர். மேலும் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் குறித்தும், அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ள இயக்குனர் யார் என்பது குறித்தும்? சில தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.

ajith acting mohan lal direction? truth reveled

அந்த வகையில் நேற்றைய தினம் தல அஜித் அடுத்ததாக பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கி, நடிக்க உள்ள 'பரோஸ்' என்கிற படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவலாக சமூக வலைத்தளத்தில் வெளியானது. 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 3டி தொழில்நுட்பத்துடன் உருவாக உள்ளது.  ஒரு பூதத்தை மையமாக கொண்டு, எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்த நிலையில், இந்த படத்தில் அஜித்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ajith acting mohan lal direction? truth reveled

மோகன்லால் அஜித்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அஜித் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்த, அதிகார பூர்வ தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது இந்த தகவல் குறித்த உண்மையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார். அஜித், 'பரோஸ்' படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுவது, முழுக்க முழுக்க வதந்தி என்று தெரியவந்துள்ளது.

பிரிதிவ்ராஜ், பிரதாப் போத்தன், பாஸ்வேகா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இந்த படத்திற்கு, 15 வயது சிறுவன்... லிடியான் நாதஸ்வரம் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios