ajith 58th movie music director announced
இயக்குனர் சிவா, தல அஜித் கூட்டணி அடுத்த படத்திலும் நான்காவது முறையாகத் தொடர்கிறது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
ஏற்கெனவே சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தைத் தொடர்ந்து அதே கூட்டணியில் சமீபத்தில் வெளியான ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும், ரசிகர்களிடமும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்க உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே அஜித் நடித்துள்ள, ஏகன், பில்லா 2 , மங்காத்தா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்திலும் அனிருத்தின் இசை இடம்பெறும் என்று பலர் எதிர்பார்த்த நிலையில் யுவன் இந்தப் படத்தில் இசையமைப்பது சிறு ஏமாற்றத்தை தந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
