இயக்குனர் சிவா இயக்கத்தில் தற்போது தல அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் , மேலும் அக்ஷரா ஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய், சுதீப், தம்பி ராமையா போன்ற பலர் நடித்து வருகின்றனர்.
தற்போது இந்த படத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல் முளைத்துள்ளது.
ஏற்கனவே சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த, தொடரி படம் தோல்வியை தழுவி உள்ளதால், விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த நஷ்டத்தை சரி செய்தல் தான் படத்தை வெளியிட அனுமதிப்போம் என விநியோகிஸ்தர்கள் கூறியுள்ளனர் .
இதனால் தல நடித்து வரும் 57வது படம் ரிலீஸ் ஆவதில் பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
