அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தில் காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளிலும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் நடைபெற்றது.
தற்போது மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் பல்கேரியா செல்லவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதுவும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கேரியாவில் 55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் இத்துடன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதாகவும், டிசம்பர் இறுதியில் படக்குழுவினர் சென்னை வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
