தல அஜித் நடித்து வரும் 57வது படமான 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக்கை அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.
கடந்த தீபாவளி, பொங்கல், குடியரசு தினம் ஆகிய ஸ்பெஷல் நாட்களில் வெளிவரும் என்று நம்பி ஏமாற்றம் அடைத்தனர் ரசிகர்கள்.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று ஏங்கியிருக்கும் அஜித் ரசிகர்களுக்காக தற்போது புதிய தகவல் வந்துள்ளது.
இதன்படி அஜித் 57' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை அதிகாலை அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி 12.01 மணிக்கு வியாழக்கிழமை செண்டிமெண்ட்படி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உண்மையெனில் இன்று இரவு அஜித் ரசிகர்களுக்கு வெடிவெடித்து அனைவர் தூக்கத்தையும் கெடுத்து விடுவார்கள் என்பது உறுதி
