செம மாஸாக தன்னுடைய உடலமைப்பு மாற்றி ஃபஸ்ட் லுக் மூலம் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் அஜித். இதை பார்த்த அனைவரும் வேதாளம் படத்தில் தோன்றிய அஜித்தா இது என மூக்கு மேல் கைவைத்துள்ளனர்.

தற்போது கோலிவுட்டில் ஹாட் டாக்கே அஜித்தை பற்றி தான் என்று கூட சொல்லலாம். மற்றொரு பக்கம் அஜித் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல அரசியல்வாதியான தி .மு .க சட்டமன்ற ஜே. அன்பழகன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அஜித்தின் மாற்றத்தை குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் ஒரு வருடம் காததற்கு கிடைத்த தல தரிசனம் என்றும் இயக்குனர் சிவா மற்றும் படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார்.