Asianet News TamilAsianet News Tamil

விக்ரம் பிறந்த நாள் ஸ்பெஷல்..! ஒரே DP - ஐ வெளியிட்டு மொத்த ரசிகர்களையும் மிரள வைத்த அஜய் ஞானமுத்து!

நடிகர் சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்காக டிசைன் செய்யப்பட்ட காமன் டிபி ஒன்றை, ரசிகர்களுக்காக பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ளார். இது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
 
ajay gyanamuthu release the common dp for vikram birthday
Author
Chennai, First Published Apr 16, 2020, 6:22 PM IST
நடிகர் சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்காக டிசைன் செய்யப்பட்ட காமன் டிபி ஒன்றை, ரசிகர்களுக்காக பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ளார். இது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் விக்ரம், சேது படத்தின் வெற்றிக்கு பிறகு,  தேர்வு செய்து  நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

ajay gyanamuthu release the common dp for vikram birthday

அந்த வகையில், தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரம் மொத்தம் 7 விதமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளார். 

ஏற்கனவே விக்ரம்  7 கெட்டப்பில் தோன்றியிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்றது.

இந்நிலையில், கோப்ரா படத்தின் இயக்குனர் நடிகர் விக்ரமின், பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், விக்ரமின் அணைத்து கதாப்பாத்திரங்களையும் ஒரு சேர உருவாக்கிய புதிய, காமம் டிபி ஒன்றை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.
ajay gyanamuthu release the common dp for vikram birthday
இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் அணைத்து விக்ரமின் கெட்டப்புகளையும் ஒரே போஸ்டரின் கொண்டு வந்து கண் முன் நிறுத்தி அஜய் ஞானமுத்து சும்மா மிரட்டியுள்ளார்.

'கோப்ரா' படத்தை, வைகாம் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. KGF
பட நடிகை ஸ்ரீநிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 
ajay gyanamuthu release the common dp for vikram birthday

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் ரஷ்யாவில், நடந்து வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனவே கொரோனா தொற்று குறித்த பரபரப்பு அனைத்தும் முடிவடைந்த பிறகே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடரும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான, 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள, காமம் டிபி இதோ..

 
Follow Us:
Download App:
  • android
  • ios