பாலிவுட் நடிகையான தபு, நான் திருமணம் செய்யாததற்கு அவர் தான் காரணம் என்று தெரிவித்து உள்ளார்

இந்தியில் மிகவும் பிரபலமான தபு, தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் சிறைசாலை, காதல்தேசம், இருவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இவருக்கு வயது 46.

இந்நிலையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் பேட்டி அளித்த போது, நான் திருமணம் செய்துக்கொள்ளாமல் தான் இருக்கிறேன்.

இப்படி இருப்பதால் தான் நான் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் என்னிடம் கேட்கும் பலபேர், திருமண வாழ்க்கை சிறந்ததா ..? அல்லது தனியாக வாழ்வதே சிறந்ததா என்று கேட்கிறார்கள்...

என்னை பொறுத்தவரையில், திருமணம் ஆகாமல் இதுவரை நான் மகிழ்ச்சியாக தான் உள்ளேன்...வாழ்வில் முதல்பாதி எனக்கு தெரியும்..அடுத்த பாதி என்பது நான் அனுபவிக்காத வாழ்க்கை..ஒரு வேளை, திருமணம் நடந்து இருந்தால் அந்த வாழ்க்கை சிறந்ததா என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்க முடியும் என அவர் தெரிவித்து இருந்தார்

மேலும் பேசிய தபு, தனக்கு திருமணம் ஆகாததற்கு காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான் என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்க வைத்தார்.

அவர் என்னுடன் இருந்த தருணங்கள் என்னால் மறக்க முடியாது ..என்னுடன் அவர் இருந்த தருணங்களை அவரும் உணர்வார்.

தேவ்கான் 1999 ஆம் ஆண்டு இந்தி நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.