aiyakannu meet rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியளுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் அந்த நாளை எதிர்கொண்டு உற்சாகமாக கர்த்துக்கொண்டுருக்கின்றனர்.

அதே போல கடந்த சில தினங்களாக பிரபல அரசியல்வாதிகளும், அவரை சந்தித்து, அரசியல் குறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு ரஜினியை அவருடைய வீட்டில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது தேசிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரஜினி ரூ.1 கோடி தருவதாக கூறியது குறித்து அவரிடம் அய்யாக்கண்ணு பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஜினியின் சகோதரர் 'ரஜினி ஏற்கனவே நதிநீர் இணைப்புக்கு அறிவித்தபடி ரூ.1 கோடியை வங்கியில் ஏற்கனவே, 'டிபாசிட்' செய்து விட்டதாகவும், நதிநீர் இணைப்பு பணிகள் துவங்கும்போது, சம்பந்தப்பட்டோரிடம் அந்த பணத்தை தருவார் என்றும், சொன்னால் சொன்னபடி செய்வார் என கூறியுள்ளார்.