பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக ஒரு போட்டியாளரை மற்றொரு போட்டியாளர் தோற்கடிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் மிகவும் கொடுமையானவர்களாக உருவெடுத்துள்ளார் என்றே கூறலாம்.

மனதாபிமானம் இன்றி, ஒருவரை ஒருவர் பழி வாங்குவது போல் இவர்கள் நடந்து கொள்வது. ரசிகர்களையே விமர்சிக்க வைத்துள்ளது. 

எனினும் இது ஒரு போட்டி என்பதால் அனைத்து போட்டியாளர்களும் இந்த கஷ்டத்தை விரும்பி ஏற்கிறார்கள்.  இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா தனக்கு மட்டும் எல்லோரும் மோசமான விஷயங்கள் செய்தார்கள் என்று கதறி அழுதார்.

ஆனால், அவர் விஜயின் கண்ணில் மிளகா தூளை தூவியதை யாரும் பேசவில்லை. இந்நிலையில் விஜியின் கணவர் பெரோஸ் டுவிட்டரில் ஒரு வீடியோ ஷேர் செய்துள்ளார். அதில் விஜியின் கண் மற்றும் மூக்கில்  ஐஸ்வர்யா ஸ்ப்ரே அடிக்கும் காட்சி பதிவாகியிருக்கிறது. ஆனால் இந்த காட்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை.

இப்படி விஜியை இவர் கூட தான் கஷ்டப்படுத்தியுள்ளார் பின் அழுவது நியாயம் இல்லை என்று ரசிகர்கள் ஐஸ்வர்யாவுக்கே எதிராக மாறியுள்ளனர். இறுதியில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.