45 வயதை எட்டியும்,  தற்போதைய இளம் ஹீரோயின்கள் பலருக்கு டப் காம்பட்டிஷன்  கொடுத்து வருபவர் நடிகை ஐஸ்வர்யாராய். 

இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என,  பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.  ஆனால் கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என விடாப்பிடியாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

மேலும் கிடைக்கும் நேரங்களில் மகள் மற்றும் கணவர் என குடும்பத்துடன் கழிக்கிறார்,  திரைப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். 

சமீபத்தில் கூட தன்னுடைய கணவரின் பிறந்தநாளன்று அவருக்கு யாரும் எதிர்பாராத வகையில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தினார். 

தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தாலும்,  பாலிவுட் படங்களில் தான் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார். எனினும் இவருக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்,  தற்போது புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் கிளீன் போல்ட் ஆகும் அளவிற்கு அழகில் ஜொலிக்கிறார் ஐஸ்வர்யா ராய். மேலும் பலர் இந்த வயதிலும் ஐஸ்வர்யா ராய் இப்படியா? என அசைந்து போய் உள்ளனர்.