உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் வீட்டு பெயரை அவரது சகோதரரின் மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக தெரிவித்துள்ளார். இந்த பெயரை பார்த்து பல ரசிகர்கள் அவரை செம்ம கிண்டல் செய்து வருகிறார்கள்.

திருமணம் ஆனாலும், குழந்தை பெற்று கொண்டாலும்... தன்னம்பிக்கை இருந்தால், ஹீரோயினாக சினிமாவில் நிலைக்க முடியும் என நிரூபித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இவருக்கு உலகம் முழுவதிலும் பல ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2016 ஆண்டு வெளியான 'ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தில் நடித்த பிறகு தற்போது அவருடைய கணவருடன் இணைந்து தற்போது ஒரு படத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

இவர் பிரபல நடிகையாக இருந்தாலும் வீட்டை பொறுத்தவரை, மகளுக்கு சிறந்த தாயாகவும், உறவுகளுக்கு மிகவும் மரியாதை கொடுப்பவராகவும் இருப்பதை பல  முறை வெளிக்காட்டியுள்ளார். 

மேலும் இவருக்கு வீட்டில் அவருடைய குடும்பத்தினர் அன்பாக அழைக்கும் செல்ல பெயரும் உள்ளதாம். அது " குலு மாமி' என்பது தான். 

இதை ஐஸ்வர்யா ராயின் சகோதரரின் மனைவி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த பெயரை வைத்து ரசிகர்கள் சிலர் ஐஸ்வர்யா ராய்யை கிண்டல் செய்து வருகிறார்கள்.