பாலிவுட்

பாலிவுட் பிரபல ஜோடிகளான ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராவண்

திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் இணைந்து 2010 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவண் என்ற ஹிந்தி படத்தில் நடித்தனர்.

மீண்டும்

இந்நிலையில் மீண்டும் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க பாலிவுட் இயக்குனரான சைலேஷ் ஆர்.சிங் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

போலீஸ்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த காவல்துறை தம்பதி குறித்த கதை ஒன்றில் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் இருவருமே போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

பொருத்தம்

இந்த படத்தை சைலேஷ் ஆர்.சிங் இயக்கவுள்ளார். இந்த உண்மை கதைக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், இதில் உண்மையான தம்பதிகளான ஐஸ்வர்யா ராயம் அபிஷேக்கும் இணைந்து நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.