பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவே ரசிகர்களுக்கு இன்று என்ன நடக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கமல் என்று கூட கூறலாம்.

எப்போதும் கமல் கலந்து கொள்ளும் இரண்டு நாட்கள் மிகவும் சுவாரிஸ்யமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கும் ரசிகர்களை இந்த வாரமும் ஏமாற்றாமல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கமல். 

சண்டை சச்சரவுக்கு குறைவில்லாமல் செல்லும் பிக்பாஸ் சீசன் 2-ல், இன்று ஐஸ்வர்யா மகத்தை பார்த்து நீங்க தூங்குறீங்க என்றால், மும்தாஜும் 24 மணி நேரமும் தூங்குவதாக கூறி கத்துகிறார். 

இதனை பார்த்து கொண்டிருக்கும் கமல், வீட்டின் உள்ளே துர்கா பூஜையே நடப்பதாக பொதுமக்களிடம் கூறுகிறார். அதற்க்கு ஏற்றப்போல் ஐஸ்வர்யாவும் யாருக்கும் மரியாதை கொடுக்காமல் டாய் என கத்தி மோசமாக நடந்து கொள்கிறார். பின் இவரை மகத் பாலாஜி ஆகியோர் அடக்குகிறார்கள். பின் பாலாஜி எதோ மும்டாஜுடம் கூற அதற்க்கு அவர் நான் எதற்கு போக வேண்டும் என பதிலடி கொடுக்கிறார்.

இதைதொடர்ந்து ஐஸ்வர்யா... பிக்பாஸ் கதவை திறங்க நான் போகிறேன் என கூறுகிறார். இவர் பலமுறை இது போல் பூச்சாண்டி காட்டி வருவதால். உள்ளே உள்ள போட்டியாளர்களிடம் நேரடியாக பேசும் கமல், 5 நிமிடம் பிக்பாஸ் வீட்டின் கதவு திறந்து வைக்கப்படும். வீட்டை விட்டு வெளியேற விருப்பம் உள்ளவர்கள் வெளியேறலாம் என கூறுகிறார். 

உடனே ஐஸ்வர்யா நான் கிளம்புகிறேன் என கூறி எழுகிறார். இதனால் இன்று என்ன நடக்கும் என பிக்பாஸ் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.