பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கண்டிப்பாக எலிமினேட் செய்யப்படுவார் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட, போட்டியாளர் ஐஸ்வர்யா. ஆனால் நினைத்தது வேறு நடந்தது வேறாக அமைந்தது. காரணம் அதிக கமல் ரசிகர்களிடம் பேசியபோது ஒரு 
கிராப் போட்டு காண்பித்து அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டது ஐஸ்வர்யா என  அறிவித்தார் . இது கேட்டவர்கள் அனைவருக்குமே மிகவும் அதிர்ச்சியாகி இருந்துதது. 

இதுகுறித்து பிக்பாஸ் ரசிகர்கள் கூறுகையில், ஐஸ்வர்யாவை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில், பிக்பாஸ் குழுவினரே அவருக்கு ஓட்டுகள் போட்டு காப்பாற்றி இருக்கலாம் என்று கூறி வந்தனர். அதே போல் சிலர் ஐஸ்வர்யாவை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில், தான் சென்ராயன் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஓட்டுக்கு காசு:

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவின் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட்டால் 50 ரூபாய் PAYTM மூலம் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் வயல் கார்டு சுற்று மூலம் ரீ என்ட்ரி கொடுத்த விஜி பேசும் ஆங்கிலம் சகிக்க வில்லை என்பதால் அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

 

 கள்ள ஓட்டு:

இந்த ட்விட்டர் பதிவை கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் ரம்யா  "ஐஸ்வர்யாவுக்கு, காசு கொடுத்து கள்ள ஓட்டு போடப்படுகிறதை அறிந்து' 'வாட்' என கேள்வி எழுப்பி பின் அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார்.

விமர்சிக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்:

பிக்பாஸ் ரசிகர்கள் பலர், நேர்மையாக வாக்கு போட்டு காப்பாற்ற நினைத்த போட்டியாளர் சென்ராயன் கடந்த வாரம் வெளியேறிய நிலையில், ஐஸ்வர்யாவை காப்பாற்ற ஒரு சிலர் இது போல் பணம் கொடுத்து நல்ல ஓட்டுக்களை கள்ள ஓட்டுகளாக மாற்றியுள்ளார் என  தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.