பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து பலர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக சின்னத்திரை மற்றும் வெள்ளிதிரை பிரபலங்கள் வீடியோ வெளியிட்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக  தன்னுடைய கோவத்தை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி பாலியல் சம்பந்தமான ஒருசில வீடியோக்களை நான் பார்த்தேன். அதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. இந்த ஜெனரேசன் மக்கள் நட்பை தவறாக பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரு விஷயத்தை அவர்கள் யோசிப்பதில்லை. அவர்களுக்கும் அம்மா, அக்கா, தங்கைகள் உள்ளனர். இவர்களுக்கு இந்தியன் போலீஸ் என்றாலே குற்றவாளிகளுக்கு ஒரு பயமில்லாமல் போய்விட்டது.

எனவே தயவுசெஞ்சு இந்த மாதிரி குற்றவாளிகளை சிறையில் அடைத்து நேரத்தை வீணாக்க வேண்டாம். அவர்களை வெட்டி சாகடியுங்கள், இவர்கள் நாட்டில் வாழ தகுதி அற்றவர்கள் என்று ஐஸ்வர்யா தத்தா கூறியுள்ளார்.