பிக்பாஸ் வீட்டிற்குள், இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு விளையாடிய பிரபலங்கள் விசிட் அடித்து வருகிறார்கள். அந்த வகையில் இதற்கு முன்பு, யாஷிகா ஆனந்த், மகத், ஜனனி ஐயர், ரித்விகா, ஆகியோர் வந்து சென்றுள்ளனர். 

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நடிகை ஐஸ்வர்யா தத்தா உள்ளே வரும் காட்சி காட்டப்பட்டுள்ளது. நீல நிறத்தில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து வந்துள்ளார். வந்ததுமே, ஆட்டம் பாட்டம் என பிக்பாஸ் வீட்டை கலை கட்ட வைத்துள்ளார்.

மேலும் போட்டியாளர்களுக்கு ஏதோ சர்பிரைஸ் கொண்டு வந்துள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தெரிகிறது. அதே போல் போட்டியாளர்களும் திடீர் என பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறிய கவலையை சற்று மறந்து ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக பேசுகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு 5 படங்களில் தற்போது கமிட் ஆகி நடித்து வருவதாக மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த புரோமோ இதோ...