பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியின் மூலம் மக்களின் வெறுப்பை அதிகம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. ஆனால் இது எந்த வகையிலும் அவருடைய சினிமா வாழ்க்கையை பாதிக்கவில்லை. மாறாக தற்போது தான் அதிக படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

இவர் தற்போது மகத் நடிக்கும் ஒரு படத்திலும், ஆரி நடிக்கும் ஒரு படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். இன்னும் ஒருசில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆரி, ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வரும் குழந்தைகள் மத்தியில் கொண்டாடியுள்ளனர். 

மேலும் குழந்தைகளை படப்பிடிப்பை காண அனுமதித்ததோடு, அவர்களுக்கு பரிசுப்பொருட்களும், உணவும் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த படக்குழுவினர் குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததோடு, ஒரு அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியதாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் ஆரி, ஐஸ்வர்யா காதலர்களாக நடித்து வருகின்றனர். இதுவொரு கவிதை நயம் கொண்ட காதல் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தை S.S.ராஜமித்ரன் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே 'அய்யனார்' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  A.G.மகேஷ் இசையில், தில்ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் தயாராகி வருகிறது.