ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, தற்போது விளையாட்டுத்துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் சென்னை லயன் அணியின் இணை உரிமையாளராக  இணைந்துள்ளார்.

இம்மாதம் 25ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற உள்ள இந்த ஆண்டிற்கான, அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் இவருடைய அணியும் கலந்து கொள்ள உள்ளது.  இந்த அணிக்கு சமீர் பரத்ராம் இணை உரிமையாளராக உள்ளார்.

இந்த போட்டியில் சென்னை தவிர டெல்லி, புனே, கோவா, கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. சென்னை அணியில் சார்பில், ஆறு பேர் கலந்து கொண்டு விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.  ஐஸ்வர்யா விளையாட்டு துறையில் இணைத்துள்ளதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஐஸ்வர்யா தனுஷ், தன்னுடைய கணவரை வைத்து 3 , ராஜா வை , உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.  விரைவில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.