பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல எதிர்ப்பாராத திருப்பங்கள் ஏற்படுகிறது. அதிலும் நேற்றைய தினம் ஐஸ்வர்யா கொஞ்சம் ஓவராக கத்தினார். இன்றைய நிகழ்ச்சியில் டோட்டலாக ஆளே எந்த பெண்ணும் செய்ய தயங்கும் செயலை சென்றாயனுக்காக செய்துள்ளார். இதை பார்ப்பவர்கள் இது உண்மையில் ஐஸ்வர்யாவா என வியர்ந்துள்ளனர்.

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களிடம் இருந்து சென்றாயனுக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் "நீங்கள் நேரடியாக நாமினேட் ஆகாமல் தப்பிக்க வேண்டும் என்றால்... ஐஸ்வர்யா தலைமுடியை வெட்டி கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.

இதனால் சென்றாயன் நேரடியாக ஐஸ்வர்யாவிடம் வந்து பேசுகிறார். ஐஸ்வர்யாவும் நீங்கள் என்ன சொல்கிறீர்களே அதை தான் செய்வதாக சொல்கிறார். சென்றாயன் மிகவும் உருக்கமாக தன் மீது உனக்கு இவ்வளவு பாசமா என கேட்க, கண்டிப்பாக சொல்லுகள் நான் என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார்.

சைகை மூலம் முடியை வெட்டி கொள்ள வேண்டும் என கூறிகிறார். சென்றாயனும் இது மிகவும் பெரிய தண்டனையாக உள்ளது என கூறுகிறார். இதற்கு மும்தாஜ் 2 இன்ச் முடி கட் பண்ண சொன்னால் உயிர் போற மாதிரி இருக்கும்  என வேதனையோடு கூறுகிறார்.

மற்றொரு புறம் ஐஸ்வர்யா தன்னுடைய முடியை கட் செய்துகொள்ள தயாராவது காட்டப்படுகிறது. ஐஸ்வர்யா முடியை கட் செய்வதற்கு முன் மும்தாஜ் அவரை கட்டி அணைத்து முத்தம் தருகிறார். பின் ஐஸ்வர்யாவின் முடி வெட்டப்படுகிறது இந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. இதற்க்கு ரசிகர்கள் பலர் ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் மறைமுகமாக ஆப்பு வைத்துள்ளதாக கூறி வருகிறார்கள்.