பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்திருக்கும் போட்டியாளர் யார்? என்றால் முதலில் எல்லோரும் கூறுவது ஐஸ்வர்யாவின் பெயராக தான் இருக்கும். யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அதை வைத்துக் கொண்டு வெறித்தனமாக பிறரிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருக்கும் இவரை மக்களுக்கு எப்படி தான் பிடிக்கும்.

சர்வாதிகாரி டாஸ்கில் ஒரு அட்டூழியம் செய்து தீர்த்த ஐஸ்வர்யா . அதன் பிறகு சில நாட்களுக்கு வாலை சுருட்டி கொண்டு பிக் பாஸ் வீட்டில் வலம் வந்தார். அதன் பிறகு மீண்டும் தன் சுய ரூபத்தை காட்ட தொடங்கினார். திடீர் திடீர் என ஐஸ்வர்யா மாறி மாறி நடந்து கொள்வதை பார்த்தால் சந்திரமுகி ஜோதிகா தான் நியாபகத்துக்கு வருகிறது போல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு.

ஐஸ்வர்யாவின் தயவால் அந்த வகையில் ஒரு பக்கம் டி.ஆர்.பி எகிறுகிறது இன்னொரு பக்கம் மீம்ஸ்கள் தாறுமாறாக வருகிறது. சரி இந்த பொண்ணு எப்படியும் எலிமினேஷன் பக்கம் வரும் அப்போ கவனிச்சுக்கலாம் என ஒவ்வொரு வாரமும் காத்திருக்கும் மக்களுக்கோ வாரா வாரம் ஏமாற்றம் தான் கிடைக்கிறது.இதில் கமல் தான் ஐஸ்வர்யாவை காப்பாற்றி விடுகிறார் என்று வேறு புரளிகல் உலவிக்கொண்டிருக்கின்றன.

இதில் எது உண்மை என்று தெரியாவிட்டாலும் , வெளியில் வந்த பிறகு ஐஸ்வர்யா மீண்டும் பெங்காலுக்கு பெட்டியை கட்ட வேண்டி வரும் என்பது மட்டும் மிக தெளிவு. இதனிடையே இன்றைய பிரமோவின் போது எவிக்ஷனுக்கு நாமினேட் செய்ய புதிய யுக்தியை கையாண்டிருக்கிறார் பிக் பாஸ். அது எதும் பெரிய நாசா கண்டுபிடிப்பெல்லாம் இல்லை. பிடிக்காதவங்க படம் ஒட்டி இருக்கிற பானையை உடைக்கனும் அவ்வளவு தான்.

இதில் மும்தாஜை நாமினேட் செய்திருக்கும் ஐஸ்வர்யா அவர் படம் போட்ட பானையை உடைத்து தவிடு பொடி ஆக்கி இருக்கிறார். அப்போதும் வெறி தீராமல் உடைத்த பானையையே மேலும் உடைக்கிறார். மும்தாஜ் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்யும் போது 12 வயது குழந்தை போல ஐஸ்வர்யா நடக்கிறார் என கூறி இருக்கிறார். அதற்கு பழி வாங்கும் விதமாக மும்தாஜ் 2 வயது குழந்தை போல நடந்து கொள்கிறார் என கூறி பானையை உடைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. நல்ல வேளை மும்தாஜ் படம் ஒட்டிய பானையை உடைக்க சொன்னார்கள் இதுவே மும்தாஜ் தலையில ஒரு அடி அடிக்க சொல்லி இருந்த பிக் பாஸ் வீட்டில் ஒரு கொலையே நடந்திருக்கும் போல.