நயன் தாரா இரட்டை வேடத்தில் நடித்து வரும் 28ம் தேதி  ரிலீசாகவுள்ள ‘ஐரா’ பட விளம்பரத்துக்காக அப்படத்தின் பேனர்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பஸ் ஒன்று தமிழகம் முழுக்க சுற்றிச்சுற்றி வரப்போவதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த பஸ்சில் நயன் உட்பட்ட படக்குழுவினர் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'லட்சுமி', 'மா' ஆகிய குறும்படங்களை இயக்கியவர் சர்ஜூன், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். இதையடுத்து கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில், கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்க, நயன்தாராவின் நடிப்பில் ‘ஐரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில், நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்; கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்; சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படம் வரும் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில், தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ், 'ஐரா’ படத்தின் ஸ்டிக்கர்ஸ் ஒட்டிய வாகனத்தை புரொமோஷனுக்காக தமிழகம் முழுவதும் ஓட வைக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த நிறுவனம் இன்று (20ம் தேதி) தனது ட்விட்டர் பக்கத்தில், “ 'ஐரா’ பஸ் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் ஓடும்; இந்த பஸ்ஸை பார்ப்பவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளது.