அட அட அட என்ன வாய்ஸுடா! மோடியின் குரலில் தமிழ் பாடல்கள்... மிஸ் பண்ணாம கேளுங்க நீங்களே Addict ஆகிடுவீங்க பாஸ்
AI தொழில்நுட்பத்தின் மூலம் பிரதமர் மோடியின் குரல்களில் தமிழ் பாடல்கள் ஒலிக்கும் படி எடிட் செய்து நெட்டிசன்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் பாடல்கள் வைரலாகி வருகின்றன.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது டிரெண்டிங்கில் உள்ள ஒரு தொழில்நுட்பம் தான் AI. Artificial intelligence எனப்படும் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும். இதை வைத்து சோசியல் மீடியாவில் பல்வேறு பதிவுகள் போடப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் புகைப்படங்களை இதன் மூலம் எடிட் செய்து பதிவுட்டு வந்த நெட்டிசன்கள் தற்போது அதற்கு ஒரு படி மேலே போய், பிரபலங்களின் குரல்களின் திரைப்பாடல்களை ஒலிக்கவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
அதிலும் தற்போது இன்ஸ்டாகிராமில் செம்ம வைரலாகி வருவது பிரதமர் மோடியின் குரலில் ஒலிக்கும் பாடல்கள் தான். ரொமாண்டிக் பாடல்கள், குத்துப் பாடல்கள், கானா பாடல்கள் என மோடியை ஒரு சூப்பர் சிங்கராகவே மாற்றி மாஸ் காட்டி வருகின்றனர் நம்மூர் நெட்டிசன்கள். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்திற்காக அனிருத் இசையமைத்த சூப்பர் ஹிட் பாடல் தான் போ நீ போ. இந்த பாடலை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோடியின் குரலில் எடிட் செய்து பதிவிட்டுள்ளனர்.
அஜித் நடிப்பில் வெளிவந்த பரமசிவன் திரைப்படத்திற்காக வித்யாசாகர் இசையில் வெளிவந்த ஆசை தோசை பாடலை மோடியின் குரலில் மாற்றி நெட்டிசன் பதிவிட்டுள்ள பதிவு இது.
கில்லி படம் ஹிட் ஆனதற்கு அதன் பாடல்களும் முக்கிய காரணம். வித்தியாசாகர் இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற அர்ஜுனரு வில்லு பாடலை மோடியின் குரலில் கேட்டால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த பதிவு.
சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆன குச்சி மிட்டாய் குருவி ரொட்டி பாடல் மோடியில் குரலில் இதோ
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த மனிதன் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் பிரதீப் குமார் பாடிய அழகழகா என்கிற பாடலின் மோடி வெர்ஷன் இதோ
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்த ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடல் மோடியின் குரலில் இதோ
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக அனிருத் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடிய தேன்மொழி பாடலின் மோடி வெர்ஷன் தான் இது
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோடியின் காந்தக் குரலில் நெட்டிசன்கள் எடிட் செய்துள்ள ஒரு சூப்பரான கானா பாட்டு தான் இது
குட்நைட் படத்திற்காக ஷான் ரோல்டன் இசையமைத்த நான் காலி என்கிற சூப்பர் ஹிட் பாடலோட மோடி வெர்ஷன் தான் இது.
ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த அன்பே அன்பே கொல்லாதே என்கிற பாடலை நெட்டிசன்கள் எடிட் செய்து வெளியிட்ட மோடி வெர்ஷன் தான் இது.
சமீப காலமாக சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் குழந்தைகளின் பேவரைட் பாடலான உருளைக்கிழங்கு செல்லக்குட்டி பாடலை இனி மோடியின் குரலில் கேட்கும் விதமாக எடிட் செய்யப்பட்ட வீடியோ தான் இது
சமீபத்திய சென்சேஷன் பாடலான ஜெயிலர் படத்திற்காக அனிருத் இசையமைத்த காவாலா பாடலின் மோடி வெர்ஷன் தான் இது.
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடலை மோடி பாடினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை வீடியோ இது
ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்திற்காக அனிருத் இசையமைத்த ஹையோடா என்கிற ரொமாண்டிக் பாடலின் மோடி வெர்ஷன் தான் இது.
இப்படி இன்ஸ்டாகிராமை திறந்தாலே அங்கு மோடி தான் மைக்கோடு நிற்கிறார். சில பாடல்களெல்லாம் மோடியே தத்ரூபமாக பாடியுள்ளது போல் இருப்பது தான் இந்த AI தொழில்நுட்பத்தின் ஹைலைட்டாக உள்ளது.