again vijaysethupathi act with nayanthaara

'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வாரிசு நடிகர், ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து 'ஒரு பக்க கதை' என்கிற படத்தை இயக்கினார் இந்த படம் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக முடங்கிப்போய் உள்ளது.

இந்த படம் வெளிவராததால், மீண்டும் ஒரு கதையை தயார் செய்து அதை தன்னுடைய முதல் படத்தின் நாயகனான, விஜய சேதுபதியிடமே கூறியுள்ளார். இவர் கூறிய கதை விஜய் சேதுபதிக்கு பிடித்து போக உடனே இந்த படத்தில் நடிக்க சம்மதித்து விட்டாராம்.

மேலும் 'சீதக்காதி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மேடை நாடக கலைஞர்களை மையப்படுத்தி எடுக்க பட உள்ளதாம், இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடிகள் யாரும் இல்லையாம் ஆனால், ஒரு சில நாயகிகள் சிறப்பு தோற்றத்தில் தோன்றுவதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் ஏற்கனவே, ரம்யா நம்பீசன் இந்த திரைப்படத்தில் நடிப்பார் என தகவல் வெளிவந்துள்ள நிலையில், மேலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என விஜய்சேதுபதியே விருப்பம் தெரிவித்துள்ளதால். இதில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.