மீண்டும் மருத்துவ முத்தம்..? பிக்பாஸ் வீட்டில் மருத்துவ முத்தத்தில் ஈடுபட்ட ஜோடி இவங்க தானாம் ..!

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2  வை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

சென்ற ஆண்டு நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியை தற்போது மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்

இந்த சீசனின் ஜனனி ஐயர், மும்தாஜ், தாடி பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்யா உள்ளிட்ட போட்டியாளர்கள்  கலந்துக்கொண்டு உள்ளனர்

ஆரம்பத்தில் சாதரணமாக சென்ற இந்த நிகழ்ச்சி, தற்போது போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்க தொடங்கி விட்டனர்.

அதில்,லிப் டூ லிப் முத்தக்காட்சி இடம் பெற்றுள்ள மாதிரி ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது.

இந்த ப்ரோமோவில், ஜனனி ஐயர் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தவாறு உள்ள ப்ரோமோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால், பிக்பாஸ் நிகழ்சியை சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வீட்டில் அமர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர்

இந்நிலையில் இது போன்ற ப்ரோமோ வெளியாகி மக்களிடேயே சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.