பிக்பாஸ் சீசன்  2  தற்போது நடைப்பெற்று வருகிறது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மும்தாஜ், ஆனந்த் வைத்தியநாதன், தாடி பாலாஜி  மற்றும் அவரது மனைவி நிதியா உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு  உள்ளனர்

முதல் மூன்று நாட்கள் சாதரணமாக சென்ற இந்த நிகழ்ச்சி தற்போது டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

போட்டியாளர்கள் அதிக ஆர்வத்துடன் பல டாஸ்கை செய்து வருகின்றனர். இதற்கிடையில் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி கதையும் பெரும் கதையாக செல்கிறது இந்த நிகழ்ச்சியில்..

இதற்கிடையில் அடுத்து வேறு எந்த நட்சத்திரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடியே உள்செல்ல வாய்ப்பு உள்ளது என ஆராய்ந்து பார்த்தால், பிக்பாஸ் சீசன் 1 இல், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற பரணி அவர்கள்  மீண்டும்  நிகழ்ச்சியினுள் செல்ல  வாய்ப்பு உள்ளதாக நெருங்கிய  வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பரணிக்கு மக்கள் அதிக ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால், நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போட்டியாளர்களுடன் சமாளிக்க முடியாமல், அவரே சுவர் ஏறி குதித்து வெளியேறிவிட்டார்.

காரணம் அந்த அளவிற்கு சக போட்டியாளர்கள் கொடுத்த மன  உளைச்சல். இந்நிலையில், பிக்பாஸ் 2  நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளுமாறு நடிகர் பரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது பிக்பாஸ் குழுவினர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்த இரண்டு வாரத்திற்குள் பரணி  நிகழ்ச்சியினுள் நுழைவார் என எதிர்பார்க்கலாம்.

அவ்வாறு பரணி நிகழ்ச்சிக்குள் சென்றால் மக்கள் பெருமளவு அவருக்கு  ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.. காரணம் அவருக்கே உண்டான உண்மையான, நேர்த்தியான நடத்தை  மட்டுமே ..என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினத்துடன்  நாடோடிகள் 2 திரைப்படத்தின் டப்பிங் முடிவுற்றது.இந்த படத்தில் நடித்துள்ள பரணி மிகவும் பிசியாக இருந்ததால் தான் நிகழ்ச்சியின் இடையே கலந்துக்கொள்ள ஓகே சொல்லி இருக்கிறார் என கூறப்படுகிறது.