பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பல மக்களின் மனதை வென்று, வெற்றி வாகை சூடிய நடிகர் ஆரி, வெற்றி பெற்று வெளியேறிய பின்னர் முதல் முறையாக நெகிழ்ச்சி ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.  சண்டை, சச்சரவுகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி நல்லபடியாக முடிவடைந்துள்ளது.

16 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், வைல்ட் கார்டாக இரண்டு போட்டியாளர்களும் நுழைந்தனர், இவர்களுக்கிடையே கடும் போட்டிகள் நிலவினாலும், கடைசி வரை 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் நின்று விளையாடிய நிலையில், கேப்ரில்லா 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து விடைபெற்றார்.

எனவே கடைசி வரை, பிக்பாஸ் வீட்டில் 5 போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களில் நேற்று நடந்த பைனலில் ஆரி அர்ஜுனன் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து ரன்னராக பாலாஜி அறிவிக்கப்பட்டார். 

இந்த வெற்றியை ரசிகர்கள் மற்றும் தனக்கு வாக்களித்த மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, நடிகர் ஆரி வெற்றி கோப்பையை கையில் பிடித்தபடி, எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே.... என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது நெகிழ்ச்சி பதிவிற்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.