after velaikaran Sivakarthikeyan joins with poRam

ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு பிறகு அதிக ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடிய படம் என்றால் அது சிவகார்த்திகேயன் படம்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திற்குள் ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ளியவர் சிவகார்த்திகேயன்.

தற்போது ஒரு முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்து தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகராகவும் வலம் வருகிறார்.

அவருடைய நடிப்பில் ‘வேலைக்காரன்’ படம் உருவாகி வருவது அனைவரும் அறிந்ததே.

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தின் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டி, ரிலீசுக்கு தயாராகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 16-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களுக்கு இசை அமைத்த டி.இமானே இந்த படத்திற்கும் இசை அமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படத்தையும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.