After Kaala Rajinikanth enter in Political

இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா படத்தின் படப்பிடிப்பு, சில நாட்கள் பெப்சி பிரச்னையின் காரணமாக நடைபெறாமல் இருந்தது. இப்போது அனைத்து பிரச்னைகளும் முடிவிற்கு வந்து விட்டதால், மீண்டும் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

தற்போது நடக்கும் படப்பிடிப்பு தொடர்ந்து 40 அல்லது 50 நாட்கள் நடைபெற உள்ளதாகவும். இதில் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படப்பிடிப்பு முடிந்த பின்னர், மீண்டும் மாவட்டங்கள் வாரியாக ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து, அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ரஜினியின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பாப்போம்.