1991ம் ஆண்டு வெளியான ரஜினி, மணிரத்னம், இளையராஜா காம்பினேஷனின் சூப்பர் ஹிட் படமான ‘தளபதி’ படத்துக்குப் பின், அதாவது சரியாக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார் சந்தோஷ் சிவன்.

‘தளபதி’ படத்துக்குப் பின் ‘ரோஜா’, உயிரே’, ‘இராவணன்’, ‘செக்கச் சிவந்த வானம்’ என்று பல படங்களில் பணியாற்றியிருந்தாலும் ரஜினி படங்களில் குறிப்பாக கே.எஸ். ரவிக்குமார் போன்ற இயக்குநர்கள் அழைத்தபோதும் சந்தோஷ் சிவன் பணியாற்றவில்லை. ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியபடியே அவ்வப்போது சந்தோஷ் சிவன் சில படங்களை இயக்கிவந்ததும் அதற்கு ஒரு காரணம்.

இந்நிலையில் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் தொடங்கவிருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் ரஜினி காம்பினேஷனில் தான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவிருப்பதை உறுதி செய்தார் சந்தோஷ் சிவன். தனது பதிவில் SantoshSivanASC. ISC...Finally 😃🤗 very excited to work with Rajini Sir after Thalapathy 😃 என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.