after 10 years kushboo acting telugu movie

நடிகை குஷ்பு நடிப்பை காட்டிலும் தற்போது அரசியலில்தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும் குடும்ப சண்டைகளை தீர்த்து வைக்கும் சர்ச்சை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், தமிழ் திரைப்படங்களிலேயே நடிக்க சிறிது இடைவெளி விட்டு வரும் குஷ்பு சமீபத்தில் தான் 12 வருடத்திற்கு பின் மலையாள திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது.

தற்போது, 10 வருடங்கள் கழித்து தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பவன் கல்யாண் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் தான், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குஷ்பு, இந்த படத்தில் பவன்கல்யாணுடன் மோதலில் ஈடுபடும் அதிரடி கதாபாத்திரத்தில் குஷ்பு நடிப்பார் என கூறப்படுகிறது.

இதனை அறிந்த தெலுங்கு ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து கூறி வரவேற்றுள்ளனர். மேலும் இந்த அனுபவத்தை பற்றி கூறியுள்ள குஷ்பு, முதல் நாள் பள்ளிக்கு போகும் குழந்தை போன்று உள்ளதாகவும், இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.