பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் எதார்த்தமான மனிதராகவும், வெகுளித்தனமான மனிதராகவும் ரசிகர்களால் அறியப்பட்ட போட்டியாளர் காமெடி நடிகர் சென்றாயன். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் நடிகர்களுடன் சக போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இவர் தற்போது வரை பழமை மறவாமல் தன்னுடைய கிராமத்து பழக்க வழக்கங்களை கைவிடாமல் பாலோ செய்து வருகிறார். இதனை குரல் எக்ஸ்பேர்ட் ஆனந்த் வைத்தியநாதன் கூட வெளியில் வரும்போது கூட கமலஹாசனிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தாக்காது.

இவருக்கு, திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. ஆனால் தற்போது வரை குழந்தைகள் இல்லை. அதனால் ஒரு முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் பேசும் போது. தனக்கு குழந்தை இல்லை என்பதை கூறி தான் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க விரும்புவதாக கூறினார் சென்றாயன்.

இவர் கூறிய வார்த்தையை சுட்டி காட்டிய கமல்ஹாசன் மிகவும் பெருமையாக இவர் தான் என் தம்பி என கூறினார். மேலும் அடுத்த வருடம் உங்களுக்கு குழந்தை பிறந்துவிடும் பாருங்கள் என கூறினார். அவர் வாய் முகூர்த்தம் பலித்தது போல் சென்றாயன் மனைவியும் ஒரு பேட்டியில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.

தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதை இது நாள் வரை, அறியாமல் இருந்த சென்றாயனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது போல்... நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றபோது கயல்விழி கூறினார். இந்த செய்தியை கேட்டதும் சென்றாயன் தன்னையே மறந்து குதித்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தார். 

இந்நிலையில் நேற்றைய தினம் குழந்தையை தத்தெடுப்பதாக கூறினாயே என்று பாலாஜி மற்றும் டேனி சென்ராயனிடம் கேட்க, அவர் நான் இரண்டு குழந்தைகளையும் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார். 

இவரின் இந்த கருத்து குறித்து, தற்போது சென்றாயனின் மனைவி தன்னுடைய பதிலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில். கண்டிப்பாக தங்களுடைய குடும்பத்தினரை சமாதானம் செய்து இரண்டாவதாக ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க தான் ஆசை படுகிறேன். இது குறித்து சென்றாயன் வெளியே வந்ததும் தன்னுடைய பெற்றோர் மற்றும் அவருடைய வீட்டிலும் அவர் பேசி விட்டால் குழந்தை தத்து எடுத்து வளர்க்க தனக்கும் முழு சம்மதம் என தன்னுடைய அதிரடி முடிவை கூறியுள்ளார். இவர்கள் இருவரின் முடிவுக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.