சமீபத்தில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை கடந்து, திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்  'திரௌபதி'.

‘பழைய வண்ணாரப்பேட்டை' பட இயக்குநர் மோகன்.ஜி, இரண்டாவது படமாக அதுவும் கிரௌட் ஃபண்டிங் முறையில் இந்த படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் 'அஞ்சலி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு ‘காதல் வைரஸ்',   திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்த ரிஷி ரிச்சார்டு கதாநாயகனாக நடித்து வருகிறார். ஷீலா நாயகனாக நடித்து வருகிறார். 

சமூகத்தில் காதல் திருமணத்திற்கு எதிராக நடக்கும் ஆணவக்கொலைகளுக்கும், பணத்திற்காக அரங்கேற்றப்படும் நாடக காதல், போலி திருமண பதிவு போன்றவற்றை தோலுரித்துள்ளது இப்படம். கண்டிப்பாக இந்த கலந்து பெண்கள் பார்க்கவேண்டிய படம் என்பதே பலருடைய கருத்தாகவும் உள்ளது.

மேலும் பல பிரபலங்கள், அரசியல் வாதிகள் என அனைவரும் படத்தை பார்த்து தங்களுடைய கருத்தை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த படத்தை, பால் வளத்துறை அமைச்சர், ராஜேந்தர் பாலாஜி... 'திரௌபதி' படத்தை பார்த்து விட்டு இயக்குனர் மோகன், மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.