தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ள நிலையில், தன்னுடைய முதல் படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ள நிலையில், தன்னுடைய முதல் படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கார்த்தி - அதிதி ஷங்கர் நடிக்கும் 'விருமன்' பட பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் போடப்பட்டது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, 'விருமான்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் அதிதி ஷங்கருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த வீடியோவும், சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

கார்த்தி - முத்தையா கூட்டணியில் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் கொம்பன், இந்த கூட்டணி நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘விருமன்’ என்ற படம் மூலமாக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். 

இந்த படம் மூலமாக தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகிறார். அதிதி இடம்பெற்றுள்ள ‘விருமன்’ பட போஸ்டரை தனது ட்விட்டரில் பகிர்ந்த சூர்யா ‘அதிதி ஷங்கரை வாழ்த்தி வரவேற்றிருந்தார். மேலும் அதிதி, தன்னுடைய தந்தையின் பட பூஜையில் மாடர்ன் உடையிலும் வந்து அசத்தி இருந்தார்.

தற்போது தன்னுடைய முதல் படத்திற்காக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.