Adah Sharma : காதலில் விழுந்தேன் என குறிப்பிட்டு நிலா வடிவில் உள்ள ஊஞ்சலில் இருந்தது கீழே விழும் வீடியோவை பதிவிட்டுள்ளார் அதா ஷர்மா.

இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் அதா ஷர்மா நடித்துள்ளார் . தனது பள்ளிப் படிப்பை முடித்த கையோடு 2008 ஆம் ஆண்டில் வெளியான "1920" எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் அதா ஷர்மா நடித்தார். இந்தப் படம் வணிக ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தீவிர உணர்ச்சியினால் ஆட்பட்டிருக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காகச் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டில் "ஹசீ தோ பசீ" எனும் காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின் ஆறு தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்தார். அதில் ஹார்ட் அட்டாக், சன் ஆஃப் சத்தியமூர்த்தி, சுப்பிரமணியம் ஃபார் சேல் , கரம், சனம் ஆகிய ஐந்தும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் 2015-ல் வெளியான ரானா விக்ரமா எனும் கன்னடத் திரைப்படத்தில் நடித்த அதா ஷர்மா நடிப்பு விமர்சகர்களால் பாராட்டு கிடைத்தது. இவர் கடந்த 20190-ம் ஆண்டு பிரபு தேவா,பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2வில் சைக்காலஜி படிக்கும் மாணவியாக நடித்துள்ளார்.

இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வைரலாவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் புல்லாங்குழலை லாவகமாக வாசிக்கும் அதா ஷர்மா. ஹிந்தி பாடல் ஒன்றை தனது இசையால் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இந்நிலையில் இன்று காதலில் விழுந்தேன் என குறிப்பிட்டு நிலா வடிவில் உள்ள ஊஞ்சலில் இருந்தது கீழே விழும் வீடியோவை பதிவிட்டுள்ளார் அதா ஷர்மா.

View post on Instagram