முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை.

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து அழுத்தமான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும், பூர்ணா கடைசியாக சமீபத்தில் வெளியிலான 'தலைவி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வரும் பூர்ணாவின் கை வசம் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. அதே போல் சில டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் தெலுங்கு தொலைக்காட்சியில், தீ ஜோடி என்ற நிகழ்ச்சியில் செய்த செயல் தான் சமூக வலைத்தளத்தில் கடும் கண்டங்களுக்கு ஆளாகியுள்ளது. இந்நிகழ்ச்சியின் நன்றாக டான்ஸ் ஆடிய ஒரு இளைஞருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து பாராட்டியது மட்டும் இன்றி அவரது கன்னத்தையும் கண்டித்துள்ளார் நடிகை பூர்ணா.

இந்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் சிலர், இது ஒரு நடுவர் செய்கிற வேலையா? என சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Scroll to load tweet…