உலக நாடுகளையே, தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதன் தாக்கம் வர துவங்கியதால், இதனை கட்டுப்படுத்தும் விதமாக, மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து இந்தியா முழுவதும், தொடர்ந்து 21 நாட்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கஜோல் மற்றும் அவருடைய மகள் நைசா இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்நிலையில் இதற்கு கஜோலின் கணவரும், பிரபல நடிகருமான அஜய் தேவ்கன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது... "கஜோல் மற்றும் நைசா பற்றி கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் நன்றி" அவர்கள் இருவருமே நலமாக உள்ளனர். மேலும் நம்பகத்தன்மை இல்லாத இந்த வதந்தி பரவி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில்தான் சிங்கப்பூரிலிருந்து நைசா இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது கஜோலின் குடும்பத்தில், அனைவரும் வீட்டில் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும்  உள்ளனர். குறிப்பாக அனைவரும் சமூக உணர்வை அறிந்து, தங்களுக்குள் இடைவெளியை கடைப்பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.