சில சினிமா நடிகைகள் ’மாயமான்’கள்தான்! திடீரென தோண்றி, உச்சம் தொட்டு சட்டென்று மறைந்து மண்ணில் அமிழ்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது ஸ்ரீதேவியும் சேர்ந்திருப்பது அதிர்ச்சியின் உச்சம்!

மறைந்த ஸ்ரீதேவியின் சாதனையெல்லாம் சமரசம் செய்து கொள்ளக்கூடியதே அல்ல. தமிழகத்தின் பட்டாசு மண்ணான சிவகாசியில் பிறந்ததாலோ என்னவோ ராக்கெட் வேகத்தி உச்சம் தொட்டு, கலர்கலராய் வர்ணங்கள் காட்டி, பார்ப்பவரையெல்லாம் பரவசப்படுத்திய வர்ணஜானத்தின் மகள் அவர். 

ஸ்ரீதேவியாவது தன் இளம் வயதில் சாதித்து, திருமண(ங்கள்)ம் ஆகி குழந்தைகளை பெற்று, மகளை ஹீரோயினாக்கும் நேரத்தில் இறந்திருக்கிறார். ஆனாலும் இது சாக வேண்டிய வயதில்லை தான். ஆனால் இளம் வயதில் மரணம் தொட்ட நடிகைகள் ஏராளம். ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த பெரும்பான்மை தமிழ் படங்களில் கவர்ச்சி ரோலில் சைடாக வந்து கலக்கியவர் சில்க் ஸ்மிதா. படம் முழுக்க நாயகனுடன் வரும் ஸ்ரீதேவிக்கு நாலு டூயட் என்றால், இடைவேளைக்குப் பின் எண்ட்ரியாகும் சிலுக்குக்கு கவர்ச்சி பொங்க பொங்க ஜஸ்ட் ஒரு பாடல்தான் இருக்கும். ஆனால் அந்த ஒரு பாட்டும் நின்று களமாடும்! என்பதுதான் ஹைலைட்டே. இப்படி கவர்ச்சி சுனாமியாக விளங்கிய சில்க் தனது 35வது வயதில் தற்கொலை செய்து கொண்டு மாண்டார். 

விஜயகாந்த், சுரேஷ் போன்ற 1980களின் புதுமுக ஹீரோக்களுக்கு தோள் கொடுத்தவர் விஜி. தூக்கலான அழகு, துறு துறு ஸ்ட்ரக்சர் என்று கிறங்கடித்தவர் விஜி. பாந்தமான அழகு, கவர்ச்சி, எல்லைகளோடு ஆபாசம் என எல்லா ஜானர்களிலும் பொருந்திப் போகிற விஜியும் எதிர்பாராத நிலையில், இளம் வயதில் மரித்தார். 

தென்னிந்திய சினிமாவின் செளந்தர்யா ஹீரோயின் எனும் பட்டத்தை பெற்றவர் செளந்தர்யா. அவரது உதடு மற்றும் கன்னத்துக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. திருமணத்துக்கு பிறகும் தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த இந்த செளந்தர்ய பெண் பி.ஜே.பி.யின் பிரச்சாரத்துக்காக 2004ல் ஹெலிகாப்டரில் சென்றபோது, அது விபத்துக்குள்ளாகி மரணித்தார். 

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உலகில் பட்டையை கிளப்பிய நடிகை படாபட் ஜெயலெட்சுமி. திரைக்கதை மரபுகளை பாலசந்தர் உடைத்தெறிந்தபோது அவரது எண்ணங்களுக்கு  வடிவம் கொடுத்த ஹீரோயின்களில் படாபட்டுக்கும் பெரிய இடமுண்டு. இப்பேர்ப்பட்ட படாபட் 1980ல் தனது 22 வது வயதில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதேபோல் தெலுங்கு பட உலகில் சவுண்டாக வலம் வந்த பார்கவி, தனது காதல் கணவனால் திருமணமான சில மாதங்களில் குத்திக் கொல்லப்பட்டார். 

சின்ன குஷ்பூ என்கிற அடைமொழியுடன் வந்த ஆர்த்தி அகர்வால், தனது உடல் எடையை குறைக்கும் சிகிச்சையில் இறங்கியபோது திடீரென இறந்தார். 

முரளி, விஜயகாந்த் போன்றோருடன் இணைந்து நடித்து, ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டவர் பிரதிக்‌ஷா, சொந்த வாழ்வில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். 

சிம்ரனின் தங்கை மோனல்! இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்த புதிதிலேயே விஜய்யுடன் நடித்தார். பெரியளவு வர வேண்டியவர் திடீரென பர்ஷனல் காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். 

இப்படி இளம் வயதில் மறைந்த நடிகைகள் ஏராளம். இந்த லிஸ்டில் நடிகர்களும் வருவார்கள்! என்பது தனி விஷயம்.