கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜரீன் கான் காரும் – மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கவர்ச்சி நடிகை ஜரீன் கானின் கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தின்போது நடிகையும் டிரைவரும் போதையில் இருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சல்மான் கானின் ’வீர்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஜரீன் கான். இவர் நடித்த ’ஹேட் ஸ்டோரி’’ஹவுஸ்ஃபுல்2’ எனும் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த படங்களின் மூலம் இந்தி ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஜரீன் கான் வலம் வருகிறார்.

தமிழில் சில வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட விக்ரமின் ‘கரிகாலன்’ படத்தின் ஹீரோயினாகவும் கமிட் ஆகியிருந்தார் ஜரீன். ஆனால் இந்த படம் பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது. 

இந்த நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகை ஜரீன் கான் கோவா சென்றுள்ளார். அங்கு காரை டிரைவர் ஓட்ட, பின்னால் அமர்ந்து ஜரீன் கான் சென்று கொண்டிருந்தார். கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜரீன் கான் காரும் – மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து காரை ஓட்டிய அப்பாஸ் மற்றும் காரில் இருந்த நடிகை ஜரீன் கான் ஆகியோரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் ஜரீன் கான் கார் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதே விபத்திற்கு காரணம் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கார் தான் இருசக்கர வாகனம் மீது மோதியதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறினர். இதனால் நடிகை ஜரீன் கானிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக நடிகை ஜரீன் கான் தனது மேலாளர் மீது மோசடி மற்றும் மிரட்டல் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.