இயக்குனர் செல்வா இயக்கிய 'நாங்க' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை விஷ்ணுபிரியா.  'புதுமுகங்கள் தேவை இல்லை'  என்ற படத்திலும் நடித்துள்ளார். 

இயக்குனர் செல்வா இயக்கிய 'நாங்க' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை விஷ்ணுபிரியா. 'புதுமுகங்கள் தேவை இல்லை' என்ற படத்திலும் நடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் மலையாளத்தில் தில் ஸ்பீடு டிராக் படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக உயர்ந்தார். ராத்திரி மழை, மகர மஞ்சு, உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்தபோது, டிவி தொடர்களில் நடிக்க துவங்கிய விஷ்ணுபிரியா பரதநாட்டிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை விஷ்ணு ப்ரியாவிற்கும், பிரபல மலையாள இயக்குனரும், தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் திருமணம் நடந்துள்ளது. வினையும் விஷ்ணு பிரியாவும் காதலித்து வந்த நிலையில், இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, இவர்களுடைய திருமணம் ஆலப்புழாவில் நடந்தது.

திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் நடிகைகள் ஸ்ருதி லட்சுமி, பாமா,உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.