தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீரழித்து விட்டு  ஏமாற்றியதாக காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு அவ்வப்போது சீமானுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டு வந்தார் நடிகை விஜயலட்சுமி. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி, சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதற்கு முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சீமான் மற்றும் அவருடைய கட்சிகார்கள் கொடுத்த அழுத்தத்தால் நான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன். இனி வாழ வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.  நான் கர்நாடக பொண்ணுங்கிறதுக்காக சீமான் என்னை மிகவும் டார்ச்சர் செய்துவிட்டார். என்னை மிகவும் அசிங்கமாக விபச்சாரி என்றெல்லாம் விமர்சித்தீர்கள். அந்த அவமானத்தால் தான் நான் இந்த முடிவெடுத்தேன். 

என்னை விபாச்சாரி என சோசியல் மீடியாவில் பலரும் அவதூறாக விமர்சித்தனர். எனக்கு இதுக்கு மேல வாழ பிடிக்கல. சீமானை எக்காரணம் கொண்டு விட்டுவிடாதீர்கள். சீமானுக்கு முன் ஜாமீனுக்கு கூட கிடைக்க கூடாது. நான் பலரிடம் கெஞ்சிவிட்டேன், ஆனால் யாரும் எனக்கு நீதி கொடுக்கவில்லை. என்னுடைய மரணம் நல்ல பாடமாக அமைய வேண்டும். சீமான் எந்த காரணத்தாலும் சும்மா விடக்கூடாது. எனக்காக சீமானை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நான் இனி உங்களுக்கு ஒரு நியாபகமாக மட்டுமே இருப்பேன். யாருக்காவது தொல்லை கொடுத்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என உருக்கமாக பேசியுள்ளார்.