நடிகை விஜயலட்சுமி நேற்று அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது இவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. தமிழை விட, பல கன்னட படங்களில் நடித்து கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர்.

இவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்தது அனைவரும் அறிந்தது. இவர்கள் இருவரும், இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக சீமானுக்கு விஜயலட்சுமி கேக் ஊட்டி விடுவது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி அதிகம் பேசப்பட்டது.

இதனிடையே,  சீமான் தனது ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டு எனது சாவுக்கு காரணம் சீமான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார் விஜி.   கடைசியாக சீமானுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தார். 

விஜயலட்சுமியின் வீடியோவிற்கு பதிலடி கொடுப்பதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆண், பெண் நிர்வாகிகள் பலரும் அவரை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தனர். பலமுறை நாம் தமிழர் கட்சியினர் தன்னை விபாச்சாரி என தரக்குறைவாக விமர்சிப்பதாகவும், கேவலமான வார்த்தைகளால் பேசுவதாகவும் விஜயலட்சுமி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் சீமான் தான் தனது மரணத்திற்கு காரணம் என்றும், அவரது கட்சியினர் என்னை தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வந்ததால் ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ள நான், இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவேன் என்றும் தெரிவித்தார். இது குறித்து அறிந்து உடனடியாக நடிகை விஜயலட்சுமியை சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த பின், தற்போது... அவருடைய உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் முதல் முறையாக, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நடிகை விஜயலட்சுமியின், புகைப்படம் வைரலாகி வருகிறது.